வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் – விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!

0
வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் - விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!
வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் - விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!
வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் – விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வக்பு வாரியம்

மத்திய மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வக்பு வாரிய ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, உதவி நிரலாளர் பதவிக்கு மூன்று பணியிடமும், மண்டல வக்பு அலுவலர் பதவிக்கு ஒரு பணியிடமும், நில அளவை உதவியாளர் பதவிக்கும் இரண்டு பணியிடமும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதவி நிரலாளர் பதவிக்கு ஆறு மாதங்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட இருப்பதாகவும், கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மண்டல வக்பு அலுவலர் பதவிக்கு 12 மாதங்களுக்கு மாத ஊதியமாக 27 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பதவிக்கு மத்திய, மாநில அல்லது பொதுத்துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3,271 – 2ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணை – முதல்வர் வழங்கல்!

அடுத்ததாக நில அளவை உதவியாளர் பதவிக்கு 12 மாதங்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 20000 வழங்கப்படும் எனவும், இந்த பதவிக்கு சர்வே அலுவலர்கள், வருவாய் அல்லது அதற்கு ஏற்ற துறைகளில் ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதன் விண்ணப்பங்களை வரும் மே 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்கிற முகவரிக்கு.அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!