ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – முக்கிய ரயில்கள் ரத்து!
ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக கன்னியாகுமரி மற்றும் புனே இடையிலான முக்கிய ரயில்கள் ஆகஸ்ட் மாதத்தில் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே நிர்வாகம் உள்ளது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொது போக்குவரத்தான ரயில் பயணத்தில் மக்கள் வசதியாக உணருவதற்காக அடிக்கடி பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சோலாப்பூர் கோட்டத்தில் இரட்டை ரெயில் பாதை அமைப்பதற்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து தெற்கு ரயில்வே வாரியம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சில முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி, கன்னியாகுமரி-புனே சந்திப்பு (16382) தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், புனே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16381) வருகிற 7,8,9 ஆகிய 3 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மும்பை சி.எஸ்.டி.-நாகர்கோவில் சந்திப்பு (16339) எக்ஸ்பிரஸ் மும்பை சி.எஸ்.டியில் புறப்படுவது வருகிற 9-ந் தேதி புனே ஜங்சன் -வாடி சந்திப்பு இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மிராஜ் சந்திப்பு வழியாக இயக்கப்படும். அதேபோல், மும்பை சி.எஸ்.டி.-நாகர்கோவில் சந்திப்பில் இருந்து வாரம் இருமுறை 5,8-ந் தேதிகளில் புறப்படுவது புனே சந்திப்பு மற்றும் வாடி சந்திப்பு இடையே மாற்றம் செய்யப்பட்டு மிராஜ் சந்திப்பு வழியாக இயக்கப்படும்.
இனி ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதில் ராகி? தகவல் வெளியீடு
மேலும், நாகர்கோவில் சந்திப்பு-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படுவது வருகிற 5,8-ந் தேதிகளில் புனே சந்திப்பு மற்றும் வாடி சந்திப்பு இடையே மாற்றம் செய்யப்பட்டு மிராஜ் சந்திப்பு வழியாக இயக்கப்படும். இதேபோல் ரெயில் எண் 16352 நாகர்கோவில் சந்திப்பு-மும்பை சி.எஸ்.டி. வாரம் இருமுறை இயக்கப்படும் ரெயிலானது 7-ந் தேதி புறப்படுவது வாடி சந்திப்பு-புனே சந்திப்பு இடையே இயக்கப்படுவது மிராஜ் சந்திப்பு வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்