திருமணம் செய்து கொண்ட ‘பிக் பாஸ்’ பிரபலம் ஷெரின் – வைரலாகும் பதிவு! ஷாக்கான ரசிகர்கள்!
விசில் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஷெரின் தற்போது திருமணம் செய்து கொண்டது தொடர்பான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ஷெரினின் திருமணம் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
திருமணம் செய்துகொண்ட ஷெரின்:
துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஷெரின். ஆனால், இந்த திரைப்படம் ஷெரினுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதற்கு பிறகு ஷெரின் நடித்த விசில் திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது, விசில் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து இருப்பார். விசில் திரைப்படத்தினை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் கூட தமிழ் திரைப்படங்களில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
Exams Daily Mobile App Download
தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார். இதற்குப்பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்தார். பிக்பாஸில் வீட்டிற்கு செல்லும்போது ஷெரின் படு குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சென்றார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கடைசி நாள் பயங்கர ஒல்லியாக க்யூட்டாக திரும்பி வந்தார்.
கோபியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் ராதிகாவின் அம்மா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் ஷெரின் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவ்வளவு பிஸி வாழ்க்கையிலும் அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை கூறும் படியான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டுள்ளார். உடனடியாக ஷெரின் தனக்கு சாப்பிடத்தான் மிகவும் பிடிக்கும். அதனால் தற்போதைக்கு உணவை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன் எனக் கூறி ஒரு அற்புதமான பதிலை கூறியுள்ளார்.