IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளேயிங் 11 இல் களமிறங்கும் 7 இந்திய வீரர்கள்!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளேயிங் 11 இல் களமிறங்கும் 7 இந்திய வீரர்கள்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளேயிங் 11 இல் களமிறங்கும் 7 இந்திய வீரர்கள்!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளேயிங் 11 இல் களமிறங்கும் 7 இந்திய வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் 25 வீரர்களுடன் களம் காண இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான முதல் தேர்வில் இடம்பெறும் 7 முக்கிய இந்திய வீரர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

IPL போட்டிகள்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் வரும் மார்ச் மாதம் 26ம் தேதி முதல் துவங்க இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் IPL தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), இதுவரை 12 சீசன்களில் விளையாடி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. அதே நேரத்தில் 11 முறை பிளேஆஃப்களை எட்டியுள்ளது. தவிர 5 சீசன்களில் இறுதி போட்டியில் இடம்பிடித்துள்ளது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க CSK அணி மெகா ஏலத்தில் 21 வீரர்களை பெற்றுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஷாக் நியூஸ் – வட்டியை செலுத்த அறிவுறுத்தல்!

அந்த வகையில் CSK அணி அதன் முக்கிய பகுதியை தக்கவைத்துக் கொண்டாலும், ஃபாஃப் டு பிளெசிஸ் என்ற சிறப்பான வீரரை இழந்துள்ளது. அதே போல ஏலத்தில் விற்கப்படாமல் போன சுரேஷ் ரெய்னாவை திரும்ப வாங்குவதில் CSK ஆர்வம் காட்டவில்லை. ஆனால் டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷிவம் துபே போன்ற பிரபலமான வீரர்கள் மீண்டுமாக CSK அணிக்கு திரும்பியுள்ளனர். இப்போது மார்ச் மாதம் முதல் துவங்க இருக்கும் IPL போட்டியை 2 குழுக்களாக பிரித்து நடத்த BCCI முடிவு செய்துள்ளது.

அதன் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் வரவிருக்கும் சீசனில் தங்களுக்குள் இரண்டு முறை விளையாடும். இப்போது ஒரு அணியில் 20 வீரர்கள் மேல் இடம்பெற்றிருப்பதால் விளையாடும் Xi அணியில் ஏழு இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுப்பது உரிமையாளருக்கு கடினமான பணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் CSK அணியில் 35 வயதிற்கு மேற்பட்ட பல வீரர்கள் இருப்பதால், இது ஒரு சவாலாக இருக்கும்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார், பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள்!

இப்போது IPL போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) அணியின் முதல் தேர்வு ஏழு இந்திய வீரர்கள் குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதன் படி, தோனி ஒருவேளை IPL 2022ல் தனது கடைசி சீசனை விளையாடுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் IPL 2021க்குப் பிறகு அவர் தனது கடைசி ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் முன்னிலையில் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அவரது பேட்டிங் திறமை சமீப காலங்களில் மாற்றம் கண்டு வருகிறது. இருப்பினும், ஒரு கேப்டனாக அவரது புத்திசாலித்தனம் தான், கடந்த ஆண்டு நான்காவது IPL பட்டத்தை வெல்ல உதவியது.

தொடர்ந்து ருதுராஜ் கடந்த சீசன் IPL தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருப்பதால், டாப் ஆர்டரில் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஃபாஃப் டு பிளெசிஸ் இல்லாததால், CSK அணி ராபின் உத்தப்பாவை களமிறக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ராயுடு CSK அணிக்காக மிடில் ஆர்டரில் இடம்பிடிக்கலாம். கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பிறகு ராயுடு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதால், அவரை பேட்டிங் வரிசையில் தோனி எப்படி பயன்படுத்துகிறார் என்பது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.

தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? கல்வித்துறை திட்டம்!

ஜடேஜா CSK அணியின் அடுத்த கேப்டனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது ஜடேஜா ஆறு அல்லது ஏழாவது இடத்தில் பேட் செய்வார். அதே போல தோனி நான்காவது வரிசையில் பேட் செய்வார் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் தொடை தசையில் காயம் ஏற்பட்டு சாஹர் இந்திய அணியில் இருந்து வெளியேறியதால், அவர் IPL தொடரை விட்டும் விலகக் கூடும் என்று செய்திகள் வந்துள்ளன. ஆனால் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அவர் ஒருவேளை அணியில் இடம்பிடித்தால், CSK லெவன் அணியில் ஏழாவது இடத்தில் இருப்பார் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!