ரிசர்வ் வங்கியில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரிசர்வ் வங்கியில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரிசர்வ் வங்கியில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரிசர்வ் வங்கியில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி, கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் மக்கள் கொரோனா மூன்றாம் அலையிலிருந்தும் மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் வேலை வாய்ப்பு என்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஒத்திவைக்கப்பட்ட அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் முக்கிய பதவிகளுக்கான UPSC, SSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே போல மாநில மற்ற துறைகளை தொடர்ந்து வங்கி துறையிலும் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 10 நாட்கள் மட்டுமே!

அந்த வகையில் தற்போது மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 238 ஆஃபிசர் கிரேடு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆபிசர் கிரேடு B பதவிக்கு ரூ.35,150 – ரூ.62,400 வரை ஊதியம் வழங்கப்படும். ஆபிசர் கிரேடு B (DEPR) பதவியில் 31 காலிப்பணியிடங்கள் உள்ளது. ஊதியம் ரூ.35,150 – ரூ.62,400 வரை வழங்கப்படும். ஆபிசர் கிரேடு BDSM) பதவியில் 25 காலிப்பணியிடங்கள் உள்ளது ரூ.35,150 – ரூ.62,400 வரை ஊதியம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here