
பாக்கியா பிரச்சனையை கண்டு கொள்ளாத கோபி, கோவப்படும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா மோசமான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார். அவருடைய சமையலை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதால் போலீசார் அவரை கைது செய்து விடுகின்றனர்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் சென்று கொண்டிருக்கிறது. பாக்கியா சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு முடியாமல் போனதாக சொல்ல அதனால் போலீஸ் கேஸ் ஆகிறது. ராதிகாவையும் பாக்கியாவையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியாவால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என ராதிகா பாக்கியா மீது கோவமாக இருக்கிறார். மறுபக்கம் பாக்கியாவை வெளியே எடுக்க வேண்டும் என செழியனும் எழிலும் முயற்சி செய்து வருகின்றனர்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரித்திகா வாங்கிய புது கார் – குவியும் வாழ்த்து மழை!
கோபிக்கு பாக்கியா ஜெயிலில் இருப்பது தெரிந்து கூட ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். வீட்டில் கூட அவர் எதுவும் பேசாமல் இருக்கிறார். வீட்டில் அனைவரும் பாக்கியாவை நினைத்து வருத்தமாக இருக்கின்றனர். இந்நிலையில் எழில் பாக்கியா சமைத்த சாப்பாட்டை பரிசோதனை செய்து பாக்கியாவை காப்பாற்ற நினைக்கிறார். அதன் படி பாக்கியா சமைத்த சாப்பாட்டில் எந்த குறையும் இல்லை வெளியே இருந்து வாங்கிய லட்டில் தான் பிரச்சனை என்ற உண்மை தெரிய வருகிறது.
அதனால் பாக்கியாவை நீதிமன்றம் விடுதலை செய்கின்றனர். அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் பாக்கியா இவ்வளவு பெரிய கஷ்டத்தில் இருந்தும் கூட கோபி வரவில்லை என்பதால் பாக்கியாவிற்கு கோபி மீது கோவம் வருகிறது. கஷ்டத்தில் உதவாதவர் தேவையில்லை என பாக்கியா மனம் வருத்தப்படுகிறார். மேலும் ராதிகா விஷயம் தெரிய வந்தால் பாக்கியா கோபி உடன் சேர்ந்து வாழ்வாரா என பல திருப்பங்கள் வர இருக்கிறது.