மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு - விரைவில் ஹாப்பி நியூஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு - விரைவில் ஹாப்பி நியூஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் 6% வரைக்கும் அகவிலைப்படி (DA) உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.

(DA) உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது பலவிதமான சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதாவது, பணவீக்கம் உயர்ந்து வருவதன் காரணமாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டிற்கு இரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கமாகி விட்டது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஏஐசிபிஐ குறியீடு உயர்வதை பொறுத்து தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பளம் உயருகிறது. மேலும், ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வையும் உறுதி செய்கிறது. அதாவது, ஏஐசிபிஐ குறியீடு உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ 7% வரைக்கும் கூட உயர வாய்ப்பிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே ஏஐசிபிஐ குறியீடு தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது.

ஜூலை 8 முதல் 5 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – அரசு முக்கிய முடிவு!

மே மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தால் டிஏ 7% வரைக்கும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு உயர்த்தப்படாவிட்டால் டிஏ 6% வரைக்கும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அதிகரித்து 34% அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 6% அதிகரிக்கப்பட்டால் 40% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!