ஜூலை 8 முதல் 5 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – அரசு முக்கிய முடிவு!

0
ஜூலை 8 முதல் 5 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு - அரசு முக்கிய முடிவு!
ஜூலை 8 முதல் 5 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு - அரசு முக்கிய முடிவு!
ஜூலை 8 முதல் 5 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – அரசு முக்கிய முடிவு!

பாகிஸ்தான் நாட்டில் ஈதுல் அஸ்ஹா பண்டிகையை முன்னிட்டு ஜூலை 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

பொது விடுமுறை

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் புனிதப் பண்டிகையான ஈதுல் அஸ்ஹா விழா இந்த ஆண்டு ஜூலை 10ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இஸ்லாமியர்கள் அதிகளவு வசிக்கும் நாடான பாகிஸ்தானில் ஈதுல் அஸ்ஹா பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு பொது விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, ஈத்-உல்-அஸ்ஹா பண்டிகைக்கான விடுமுறைகள் ஜூலை 8 முதல் 12 வரை கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் ஈத்-உல்-அஸ்ஹா விடுமுறைகள் ஜூலை 8 முதல் 12 வரை அதாவது வெள்ளி முதல் செவ்வாய் வரை அனுசரிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூன் 29 அன்று மத்திய ரூட்-இ-ஹிலால் குழு பாகிஸ்தானில் ஜில்-ஹஜ் நிலவு காணப்படவில்லை என்று அறிவித்தது. இருப்பினும், பாகிஸ்தானில் ஈத் உல் அதா பண்டிகை ஜூலை 10 ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படும் என கூறி பிறை நிலவை காண்பதற்கான குழுவின் தலைவர் அப்துல் கபீர் ஆசாத் இந்த பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் உரையாற்றும் போது, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் சந்திரனை பார்த்ததற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பாகிஸ்தானில் தற்போது நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை பண்டிகைக்காக பலியிடப்படும் விலங்குகளின் விலையை உயர்த்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here