தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் விருது – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

0
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் விருது - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் விருது - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் விருது – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 46 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ரூ.5 லட்சத்துடன் விருது:

தமிழகத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு கொள்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரம் 19.02 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2021-22ம் நிதியாண்டில் 21.79 லட்சம் கோடி ரூபாயாக வேகமாக உயர்ந்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில், 48.1 பில்லியன் டாலராக இருந்த மாநில உற்பத்தித் துறையின் பங்களிப்பை, 2030-31-ஆம் நிதியாண்டில், 250 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கான வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இலக்கினை அடைய 23 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

CBIC வரி ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

இதையடுத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள், இரசாயனங்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், கனரக பொறியியல், தோல் பொருட்கள், ஆடைகள், நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், தகவல் சேவைகள் போன்ற துறைகளிலும்,தொழில்நுட்பம் சார்ந்த வகையில் தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்த, கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2021-22-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சதவீதம் ஆக உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

இவை மட்டுமல்லாமல், தமிழ்நாடு அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வரும் மாநிலமாகவும் திகழ்கிறது. இதையடுத்து தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அடிப்படையில் அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு தமிழ்ப்பற்றை தூண்டும் விதமாக கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் வருடம்தோறும் நடத்தப்படும் என்றும், தமிழில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் போட்டிகள் நடத்த ரூ.16 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!