தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை? அமைச்சர் எழுப்பிய சந்தேகம்! அச்சத்தில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை? அமைச்சர் எழுப்பிய சந்தேகம்! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை? அமைச்சர் எழுப்பிய சந்தேகம்! அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை? அமைச்சர் எழுப்பிய சந்தேகம்! அச்சத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதால், தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா 4வது அலை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இது குறித்து முக்கிய தகவலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

நான்காவது அலை:

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் ஓமைக்ரான் பிஏ2 வகை வைரஸ் தான் தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் இன்று சென்னை மருத்துவ கல்லூரியின் 186 வது இளங்கலை பட்டமளிப்பு மருத்துவ நிறைவு தின விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய, அவர் உலகின் 100 சிறந்த மருந்துவக் கல்லூரிகளில் ராஜீவ் காந்தி கல்லூரி 60 வது இடத்தை பெற்றுள்ளது என்றும் ஆசியாவில் மிக பழமையான கல்லூரி என்று பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய, நம் அனைவரின் வாழ்வின் நடைபெற்ற கொடூரம் எதுவென்றால் அது கொரோனா தான். அந்த தொற்று மீண்டும் மீண்டும் உருமாற்றம் அடைந்து நம்மை துன்புறுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது என்றும், வரும் காலத்தில் வெறும் நோயோடு வாழ வேண்டியிருக்கும் என சௌமியா சுவாமிநாதன் கூறிய கருத்தை சுட்டிக்காட்டினார். மேலும் பொதுமக்கள் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது, போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் மீண்டும் கொரோனா 4வது அலை வந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த்திவிடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!