TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

0
TET தேர்வர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
TET தேர்வர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TET தேர்வுக்கு என்னென்ன பாடத்திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்தும் இந்த பாடத்திட்டங்களை எவ்வாறு படிப்பது என்பது குறித்த தகவலை பாப்போம்.

TET தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசைப்படும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த தகுதித் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி உயர்வு!

இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடைபெறும். முதல் தாள் எழுதுபவர்கள் 12ம் வகுப்பில் குறைந்த பட்ச மதிப்பெண்களுடன் 50 % வது பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுதுவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முதல் தாள் 150 மதிப்பெண்களுக்கு 150 வினாக்கள் கேட்கப்படும். இதில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 30 , மொழிப்பாடம் 30 , ஆங்கிலம் 30 , கணிதம் 30 , சுற்றுச்சூழல் கல்வி 30 ஆகிய பாடப்பகுதிகளில் மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். மற்றும் இரண்டாம் தாளுக்கான 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 30 மதிப்பெண், மொழிப்பாடம் 30, ஆங்கிலம் 30 , சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து 60 கேள்விகள் கேட்கப்படும்.

டெட் தேர்வுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். பேப்பர் 2 எழுதுபவர்கள் கூடுதலாக நீங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களையும் தனியாகப் படித்துக் கொள்ள வேண்டும். தமிழில் இலக்கணம், செய்யுள், உரைநடை என தனித்தனியாக பிரித்து படித்துக் கொள்ள வேண்டும். இதற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகத்தைப் படித்துக் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் இலக்கணம் சார்ந்த வினாக்களை படித்து கொள்ளுங்கள்.

Exams Daily Mobile App Download

கணிதத்தைப் பொறுத்தவரை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். பேப்பர் 2ல் கணிதத்தை எடுத்தவர்கள் சிலபஸூக்கு ஏற்றவாறு படித்து கொள்ள வேண்டும். அதேபோல் அறிவியல் பிரிவில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பாடங்களை படிக்க வேண்டும். சமூக அறிவியலுக்கு கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும். உளவியல் பாடங்களை கடைசியாக படித்துக் கொள்ள வேண்டும். இதை படித்தால் நன்றாக டெட் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

முழுமையான பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே குறிப்பிட்ட இணையதள பக்கத்திற்கு சென்று பார்வை இடவும்.

தாள் 1 க்கு http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20I.pdf கிளிக் செய்யவும். மற்றும்

தாள் 2 க்கு http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20II.pdf கிளிக் செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!