பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு – இன்று முதல் தொடக்கம்!

0
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு - இன்று முதல் தொடக்கம்!
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு - இன்று முதல் தொடக்கம்!
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு – இன்று முதல் தொடக்கம்!

கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவில் உள்ள 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படும் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை தொடக்கம்:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் நேரடி வகுப்புகள் தொடங்கியது. மேலும் ஆண்டு இறுதித்தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் மக்கள் அனைவரும் வெளியே செல்ல பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் மர நிழலைத் தேடிப்பிடித்து தஞ்சம் அடைகின்றனர்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாட்களில் சவரனுக்கு ரூ.736 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதிலும் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இயல்பை காட்டிலும், வெயில் அதிகமாக உள்ளது. அதிக வெப்ப நிலையோடு, அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளின் நேரத்தில் மாற்றம், முன்கூட்டியே கோடை விடுமுறை ஆகிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை கோடை விடுமுறை அறிவிப்பை கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

Exams Daily Mobile App Download

அந்த அறிவிப்பின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை (மே 23) இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த உத்தரவு ஜம்மு பிரிவு அல்லது கோடை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் மே 23 (இன்று) முதல் ஜூலை 9 வரை என்றும், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை மே 30 முதல் தொடங்கி ஜூலை 9 வரை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!