இந்திய ரயில்வே துறையில் 3612 காலியிடங்கள் – 10 வகுப்பு படித்தவர்களுக்கான வாய்ப்பு! தேர்வு கிடையாது!

0
இந்திய ரயில்வே துறையில் 3612 காலியிடங்கள் - 10 வகுப்பு படித்தவர்களுக்கான வாய்ப்பு! தேர்வு கிடையாது!
இந்திய ரயில்வே துறையில் 3612 காலியிடங்கள் - 10 வகுப்பு படித்தவர்களுக்கான வாய்ப்பு! தேர்வு கிடையாது!
இந்திய ரயில்வே துறையில் 3612 காலியிடங்கள் – 10 வகுப்பு படித்தவர்களுக்கான வாய்ப்பு! தேர்வு கிடையாது!

இந்திய ரயில்வேயில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்ட 18 தொழிற்பணிகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக சுமார் 3612 தொழிற்பழகுனர்கள் தேர்தெடுக்கப்படவுள்ளனர் அதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் சேர்ப்பு:

இந்தியாவில் மக்கள் கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதனை நிரப்பும் பொருட்டு ஆட்களை தேர்வு செய்ய போட்டித்தேர்வுகளும் நிரப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து இந்திய ரயில்வே தொழிற்பழகுனர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்ட 18 தொழில் பணிகளுக்கு 3612 தொழிற் பழகுனர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை உள்ளது. அதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு  10 ஆண்டுகள் வரை சலுகை உள்ளது. மேலும் ஐடிஐ கல்வி பெற்றிருக்க வேண்டும்.மேலும் இவர்கள் 10ம் வகுப்பில் 50%  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அந்தந்த தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேற்சொன்ன தகுதி  உடையவர்கள் www.rrc-wr.com என்ற   இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – சிறப்பு ரயில்களில் நேர மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மகளிர் போன்றோர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீடு, 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு மாதாந்திர ஊதியமும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தெடுக்கப்படும் 3612 தொழிற்பழகுனர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!