ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – சிறப்பு ரயில்களில் நேர மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

0
ரயில்வே பயணிகள் கவனத்திற்கு - சிறப்பு ரயில்களில் நேர மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
ரயில்வே பயணிகள் கவனத்திற்கு - சிறப்பு ரயில்களில் நேர மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – சிறப்பு ரயில்களில் நேர மாற்றம்! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்து கடந்த மே 27ம் தேதி முதல் மதுரை – தேனி ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ளது. தற்போது இந்த ரயில் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகள்:

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் 1928ம் ஆண்டு போடி மற்றும் மதுரை இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. அதனால் மதுரை மற்றும் போடி இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த பணிகள் நடைபெற தாமதமானது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து பொதுமக்கள் இது தொடர்பாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அரசு ரூ.506 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணியை விரிவுபடுத்தியுள்ளது. இதில் முதற்கட்டமாக மதுரை – தேனி இடையே 75 கி.மீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு சோதனை ஓட்டத்திற்கு பிறகு மதுரை – தேனி இடையிலான ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 26ம் தேதி பாரத பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.

தமிழக காவல் துறையினருக்கு முக்கிய உத்தரவு – டிஜிபி சைலேந்திர பாபு நடவடிக்கை!

அதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்போது மதுரை – தேனி ரயில் சேவையில் நேர மாற்றப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு கிளம்பி 09.35 மணிக்கு தேனியை வந்தடைகிறது. அதே போல் மறுமார்க்கத்தில் 6.15 மணிக்கு தேனியிலிருந்து கிளம்பி 07.35 மணிக்கு மதுரை சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மதுரையிலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனிக்கு செல்லும் என்றும் தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 7.50 மணிக்கு வந்து சேரும் என்று நேர மாற்றம் செய்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!