திருவண்ணாமலை கோவிலில் ரூ.30000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!

0
திருவண்ணாமலை கோவிலில் ரூ.30000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!
திருவண்ணாமலை கோவிலில் ரூ.30000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!
திருவண்ணாமலை கோவிலில் ரூ.30000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்ததை அடுத்து அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளி நடைபெறுகிறது. இதில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் – பெற்றோர்கள் கோரிக்கை!

மேலும் இந்து சமய இலக்கியங்களிலும் தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் தகுந்த அறிவை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பல்கலைக் கழகம் அல்லது மேல்நிலைப்பள்ளி போன்றவற்றில் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக் காலம் பணிபுரிந்து இருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மேலும் இந்து சமயத்தவராகவும் அதனை பின்பற்றுபவராகவும் சைவ சமயக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!

இதையடுத்து தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ. 35,000 வழங்கப்படுகிறது. அத்துடன் ஆகம ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ. 30,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை 20.01.2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!