மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த தொகை எப்போது ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DA நிலுவைத்தொகை:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைப்படியை ஜூலை மாதத்தில் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்துவது குறித்த விவாதங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகை இதுவரை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்த ஊடக செய்திகளின்படி, நிலுவையில் உள்ள DA தொகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் DA குறித்து எந்த நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்படவில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் DA பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்து போனது.

Exams Daily Mobile App Download

உண்மையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான DA தொகை நிலுவையில் உள்ளது. இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. கடந்த மாதங்களில், ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டபோது, இதிலும் மோடி அரசு முடிவு எடுக்கக்கூடும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். மேலும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, நிதி அமைச்சகம், செலவினத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஜே.சி.எம் நடத்திய கூட்டுக் கூட்டம் பற்றி பேசப்பட்டது. ஆனால் நிவாரணம் அளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இப்போது அகவிலைப்படியில் 3 தவணையாக ரூ.1000 வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வூதிய விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில், செலவினத் துறையின் பிரதிநிதி, முந்தைய டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றின் நிலுவைத் தொகை விடுவிக்கப்படாது என்று தெளிவுபடுத்தினார். இதுவரை ஊழியர்களுக்கான அகவிலை நிவாரணம் மற்றும் அகவிலைப்படியின் மொத்தத் தொகை சுமார் ரூ.34,000 கோடியாக இருக்கிறது.

SBI வங்கி நிறுவனத்தில் 641 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்கள் இதோ!

இதற்கிடையில் DA உயர்வு மூலம் 11 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட இருந்த நிலையில், அரசின் இந்த முடிவு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இப்போது, 7வது ஊதியக் குழுவின் கீழ் தோராயமான மதிப்பீட்டின்படி, லெவல்-1 மத்திய அரசு ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதே போல நிலை-13 ஊழியர்களுக்கு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையும், லெவல் 14 ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏ ரூ.1,44,200 லிருந்து ரூ.2,18,200 ஆக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!