ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்கள் வங்கி விடுமுறை – பட்டியலை வெளியிட்ட RBI! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்கள் வங்கி விடுமுறை - பட்டியலை வெளியிட்ட RBI! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்கள் வங்கி விடுமுறை - பட்டியலை வெளியிட்ட RBI! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்கள் வங்கி விடுமுறை – பட்டியலை வெளியிட்ட RBI! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது பட்டியலை வெளியிட்டு உள்ளது. இது குறித்து சில விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பட்ட வங்கிகளிலும் வாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் விடுமுறையாக தான் எப்போதும் இருக்கும். இது தவிர ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும் ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு வேலைகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

விரைவில் நிறுத்தப்படும் கொரோனா காலர் ட்யூன்கள் – மத்திய அரசு தகவல்!

இந்த நிலையில் குறிப்பாக, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ் புத்தாண்டு போன்ற முக்கிய தினங்களில் விடுமுறை வர இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு அந்த நேரத்தில் காசோலை பரிவர்த்தனை, வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் பணம் எடுப்பது ஆகிய சேவைகள் பாதிக்கப்படும் என்றாலும், ஆன்லைன் பேங்கிங் சேவைகள் எப்போதும் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று புதிய நிதி ஆண்டு துவங்க உள்ளது. இதுவே மாதத்தின் முதல் இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளில் விடுமுறையாக உள்ள தினங்கள், ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று கணக்குகளை முடிப்பதற்காக வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். நாட்டின் பெரும்பாலான இடங்களில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். அதே சமயம், ஐஸ்வால், சண்டிகர், ஷில்லாங் மற்றும் சிம்லா ஆகிய இடங்களில் மட்டுமே வங்கிகள் செயல்படும். ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை, ஹைதராபாத், பெலாப்பூர், பெங்களூரு, இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் தெலுங்கு வருடப் பிறப்பு, சஜிபு நொங்கபன்பா போன்ற பண்டிகைகள் காரணமாக விடுமுறை ஆகும்.

ஏப்ரல் 4 ஆம் தேதி சர்ஹுல் பண்டிகையை முன்னிட்டு ராஞ்சி நகரில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். ஏப்ரல் 5 ஆம் தேதி பாபு ஜகஜீவன் ராம் பிறந்தநாள் காரணமாக ஹைதராபாதில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வைசாகி போன்ற பண்டிகைகள் காரணமாக தமிழகம் உட்பட நாட்டின் பல இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அடுத்ததாக, ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி, வங்காள புத்தாண்டு ஆகிய விழாக்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும், ஏப்ரல் 16 ஆம் தேதி கரியா பூஜாவை முன்னிட்டு அகர்தலா நகரில் வங்கிகளுக்கு விடுமுறை என்றும், ஏப்ரல் 19 ஆம் தேதி ஷாப் ஐ காதர் மற்றும் ஜுமத்-உல்-விதா நிகழ்வை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவித்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!