ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – காவல்துறை ஆணையர் உத்தரவு!

0
ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - காவல்துறை ஆணையர் உத்தரவு!
ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - காவல்துறை ஆணையர் உத்தரவு!
ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – காவல்துறை ஆணையர் உத்தரவு!

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம், பெரும்பாலான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள எஸ்எஸ்சி தேர்வுகளை முன்னிட்டு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளில் 337 பிரிவுகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை பகுதி X/2022/தேர்வு பணியிடங்களின் கீழ் கணினி அடிப்படையிலான தேர்வு முறையின் மூலம் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவுள்ளது. மேலும் கல்வித் தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in மற்றும் அதன் தென்மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அனைத்து பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!

இந்தப் பதவிகளுக்கான தேர்வு உத்தேசமாக 2022 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறக் கூடும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர், ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம்நகர் மற்றும் வாரங்கல் ஆகிய 20 நகரங்களில் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 1 (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்ட் 10 (புதன்கிழமை) வரை எஸ் எஸ் சி தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 விதிக்கப்படும் என்று சைபராபாத் காவல் துறை ஆணையர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். பிரிவு 144 உத்தரவு படி, எஸ் எஸ் சி தேர்வு மையங்களைச் சுற்றி காலை 9:30 முதல் மதியம் 12:00 மணி வரையிலும், இரண்டாம் ஆண்டு எஸ்எஸ்சி உயர்நிலைத் துணைத் தேர்வு மையங்களுக்கு அதிகாலை 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் முழு நேரமும் 144 உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் போலீஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் கடமையில் இருக்கும் ஊர்க்காவல் படையினர் ஆகியோருக்கு SSC பரீட்சை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திலிருந்து, பறக்கும் படை, கல்வித் துறை மற்றும் இறுதி ஊர்வலங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைகளை மீறும் எந்தவொரு நபரும் பிரிவு 144 CrPC இன் கீழ் வழக்கு தொடரப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!