PM KISAN பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைப்பணத்தை பெற இதை செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ!

0
PM KISAN பயனர்கள் கவனத்திற்கு - 11வது தவணைப்பணத்தை பெற இதை செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ!
PM KISAN பயனர்கள் கவனத்திற்கு - 11வது தவணைப்பணத்தை பெற இதை செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ!
PM KISAN பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைப்பணத்தை பெற இதை செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ!

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 11வது தவணை உதவித்தொகைக்கான பலன்களை பெற குறிப்பிட்ட தேதிக்கு முன் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

கிசான் யோஜனா திட்டம்

நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் பணம் நிதி உதவியாக அனுப்பப்படுகிறது. இந்த பணம் ரூ.2000 என்ற அடிப்படையில் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் 10 தவணை பணத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் 11வது தவணை பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் பலன் கிடைக்க இருக்கிறது. இப்போது பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் பெற ஒரு சில வேலைகளை முடித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LPG கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

இது குறித்து வெளியான ஊடக அறிக்கையின்படி, விவசாயிகளின் கணக்கில் 11வது தவணைக்கான 2 ஆயிரம் ரூபாய் சம்மன் நிதி விரைவில் அனுப்பப்படும். ஆனால் அதற்கு முன் அவர்கள் தங்கள் இ-கேஒய்சி எண்ணை கிஷான் கணக்குடன் இணைந்திருக்க வேண்டும். அப்படி செய்தால் தான், 11வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் பணம் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த சேவைகளை PM Kisan போர்ட்டல் மூலம் மேற்கொள்ள முடியும். மற்றபடி, PM கிசான் கணக்கின் e-KYC இணைப்பை அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்றும் மேற்கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download

இப்போது PM கிசான் கணக்கின் e-KYCக்கான கடைசி தேதி மே 22 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட தேதிக்குள் e-KYC செயல்முறையை முடிக்காவிட்டால் 11வது தவணைப்பணம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இப்போது பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் முதலில் PM Kisan Yojana அதிகாரப்பூர்வ வலைதளமான https://pmkisan.gov.in க்கு செல்லவும். பிறகு, திரையின் மேற்புறத்தில் தோன்றும் ‘e-KYC’ விருப்பத்தை கிளிக் செய்து ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பித்தால் ‘e-KYC’ செயல்முறை முடிவடையும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!