Post Office இல் 100 ரூபாய் முதல் அருமையான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

0
Post Office இல் 100 ரூபாய் முதல் அருமையான சேமிப்பு திட்டம் - முழு விபரங்கள் இதோ!
Post Office இல் 100 ரூபாய் முதல் அருமையான சேமிப்பு திட்டம் - முழு விபரங்கள் இதோ!
Post Office இல் 100 ரூபாய் முதல் அருமையான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

அஞ்சல் துறையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்களில் அதிகளவு லாபங்களை பெற முடிகிறது. இதில் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் லாபங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர். அதில் குறிப்பாக பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் முதலீடுகளை செலுத்த தொடங்கியுள்ளனர். இதில் அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் தான் அதிகளவு முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஏனெனில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக நிலையான லாபமும் மற்றும் அதிக வட்டி தொகையும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கிறது.

ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு ஓய்வு பெறும் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் அதிகமான லாபத்தை தரக்கூடியதாக உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் கிடைக்கிறது. அத்துடன் இத்திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். மேலும் இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் செலுத்த முடிகிறது. அதனால் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் மத்தில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்ச தொகைக்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை.

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தேவையில்லை – அமைச்சர் விளக்கம்!

இதையடுத்து இத்திட்டத்தில் 12 ஆண்டுக்கு முதலீடு செய்தால் முதலீடு பணம் இரண்டு மடங்காக மாறிவிடும். இதில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 டெபாசிட் செய்தால் முதிர்வு காலம் முடிவில் கோடிக்கணக்கில் லாபங்களை பெற முடியும். அத்துடன் இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.333 முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும் போது 16.28 லட்ச ரூபாய் சேமிக்க முடிகிறது. மேலும் இதில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வைப்புத் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு வைப்புத் தொகையுடன் சேர்க்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றி கொள்ளும் வசதிகளும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!