100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்வு – ராகுல் காந்தி உறுதி!

0
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்வு - ராகுல் காந்தி உறுதி!

100 நாள் வேலை திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

ஊதிய உயர்வு:

நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மக்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. 100 நாட்களுக்கு இத்திட்டத்தின் மூலமாக பதிவு செய்த மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு தினசரி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் 294 ஆக இருந்த தினசரி ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி நேற்று அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பின்படி வரும் நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கான தினசரி ஊதியம் ரூபாய் 319 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

CBSE பள்ளி மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம் – உண்மை நிலவரம் என்ன?

இது குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து ராகுல் காந்தி தனது தளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும், பிரதமர் சம்பளத்தை ரூபாய் ஏழு உயர்த்தியுள்ளதாகவும், இவ்வளவு பெரிய தொகையை என்ன செய்வீர்கள் என்று பிரதமர் கேட்க கூடும் என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு நாட்டில் அமைந்த முதல் நாள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் தினசரி கூலி ரூபாய் 400 ஆக உயர்த்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!