திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் - 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் - 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு தொற்று தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் பக்தர்கள் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வகையில் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் மகிழ்ச்சி:

இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றின் அதீத தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் மூலம் அனைத்து வழிபாட்டுதளங்களுக்குள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகளான கொரோனா தடுப்பூசி , மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – 500 ரூபாய் முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு! கைநிறைய லாபம்!

இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தினசரி தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் அதிக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் திருப்பதி கோவிலில் இந்த மாதம் 16ஆம் தேதி முதல் கவுண்டர்களில் மேலும் 10000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு அதிக மகிழ்ச்சி தரும் தகவலாகும்.

தமிழகத்தில் பிப்.19ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

இதன் தொடர்ந்து திருப்பதியில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு 1 கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் என்று நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உதய அஸ்தமன சேவை டிக்கெட் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட் மூலம் வருடத்தில் ஒரு நாள் திருப்பதி கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தரிசிக்க முடியும். மேலும் கட்டப்பட்ட வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகள் பெறுவதற்கு தொழில்நுட்ப பணிகள் முடிந்து இந்த மாதம் 16ம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!