சர்ச்சை பதில் அளித்த ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கிய Zomato நிறுவனம் – நெட்டிசன்கள் வரவேற்பு!

0
சர்ச்சை பதில் அளித்த ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கிய Zomato நிறுவனம் - நெட்டிசன்கள் வரவேற்பு!
சர்ச்சை பதில் அளித்த ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கிய Zomato நிறுவனம் - நெட்டிசன்கள் வரவேற்பு!
சர்ச்சை பதில் அளித்த ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கிய Zomato நிறுவனம் – நெட்டிசன்கள் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளிக்கும் முயற்சியின் போது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் சர்ச்சையான பதில்களை அளித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சர்ச்சைக்குரிய பதில்:

ஆன்லைன் உணவு வழங்கும் சேவை நிறுவனமான சொமேட்டோ நாடு முழுவதும் பிரபலமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மாலை உணவு ஆர்டர் கொடுத்த நபருக்கு உணவு வழங்கப்படவில்லை. அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி புகார் அளிக்கும் போது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் வாடிக்கையாளரிடம் இந்தி நமது தேசிய மொழி, எனவே அனைவரும் சிறிதளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று பதில் அளித்திருந்தார். இதனால் அந்த வாடிக்கையாளர் அவரின் பதிலை சோமட்டோ நிறுவனத்தின் டிவீட்டர் பக்கத்தில் டேக் செய்து முறையிட்டார்.

அக்.25ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்தது. ஆனால் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் இது தொடர்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ அறியாத ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருக்கிறது. நாட்டின் சகிப்புத்தன்மை தற்போது இருப்பதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். யாரை குறைக்கூறுவது?. அதேபோல அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல.

TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு – மக்கள் நீதி மய்யம் புதிய கோரிக்கை!

எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். இப்போதுதான் அவர்கள் கற்றுக்கொண்டு தனது வேலையை தொடங்கியிருக்கிறார்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல. நானும்தான். நாம் மற்றவருடைய குறைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நமது நாட்டை நேசிப்பதைபோல உங்களையும் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!