ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா – ப்ரோமோ ரிலீஸ்!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "புதுப்புது அர்த்தங்கள்" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா - ப்ரோமோ ரிலீஸ்!
ஜீ தமிழ் “புதுப்புது அர்த்தங்கள்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா – ப்ரோமோ ரிலீஸ்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் சீரியல் தான் ” புது புது அர்த்தங்கள்” இந்த சீரியலில், நடிகை தேவயானி லீட் ரோலில் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலில் தற்போது பிக்பாஸ் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

நடிகை வனிதா விஜயகுமார்:

சின்னத்திரையில் பல சீரியல்கள் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. தினசரி எபிசோடுகளில் விறுவிறுப்பை அதிகரிக்க பல சுவாரஸ்யமான காட்சிகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ் கதாநாயகியான நடிகை தேவயானி லீட் ரோலில் நடிக்கும் “புது புது அர்த்தங்கள்” என்ற சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வெற்றி சீரியல்களை தந்த நடிகை தேவயானி அதன் பின் சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக இந்த சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் தேவயானி லட்சுமி அம்மாவாக, பவித்ராவுக்கு மாமியாராக தன்னுடைய முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நடிகை தேவயானியின் நடிப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு பாக்கியாவிடம் கூறும் தனம் – மகா சங்கமம் ப்ரோமோ ரிலீஸ்!

அதில் சிறப்பு தோற்றத்தில் பிக்பாஸ் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அதாவது கதாநாயகி பிங்க் எப்ஃப் எமில் வேலை செய்கிறார். அங்கே வனிதாவை வைத்து நேர்காணல் செய்திருக்கின்றனர். அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அந்த கேள்விகளை எழுதி கொடுப்பவர் லட்சுமி தான். எல்லா கேள்விகளும் கல்யாணம், விவாகரத்து பற்றி இருந்ததால் வனிதாவுக்கு கோவம் வருகிறது. பிங்க் எஃப் எம்மில் இருப்பவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என ஆர்வமாக இருக்க வனிதா, இந்த கேள்விகளை எழுதிய லட்சுமியை பார்க்க வேண்டும் என்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here