நடிகை ரேஷ்மாவுக்கு மெட்டி போட்டு விடும் மதன் – திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!

0
நடிகை ரேஷ்மாவுக்கு மெட்டி போட்டு விடும் மதன் - திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!
நடிகை ரேஷ்மாவுக்கு மெட்டி போட்டு விடும் மதன் - திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!
நடிகை ரேஷ்மாவுக்கு மெட்டி போட்டு விடும் மதன் – திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர காதல் ஜோடிகளான மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் இன்று திருமண பந்ததுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த திருமணத்தில் மெட்டி போடும் நிகழ்வு தற்சமயம் நடைபெற்றிருக்கும் நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

திருமண நிகழ்வு

சமீப காலமாக தமிழ் சின்னத்திரை பிரபலங்களின் வீட்டில் சில கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு பக்கம் சின்னத்திரை காதல் ஜோடிகள் திருமண பந்தத்துக்குள் நுழைய, நடிகைகள் பலர் அம்மாவாகப் போகும் தருணத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் டிவியின் ‘கோகுலத்தில் சீதை’ சீரியல் நடிகை வைஷாலி தணிகா, ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் ஆகியோரது காதல் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய கண்ணம்மா வினுஷா யார் தெரியுமா? ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!

இதில் எதிர்பாராத விதமாக தீடீரென நடைபெற்றது நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யனின் திருமணம் ஆகும். இப்படி இருக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர காதல் ஜோடியான மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நடிகை ரேஷ்மா.

இந்த தொடரில் சுந்தர் என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் மதன். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமணம் குறித்து அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கான மெஹந்தி விழா, நிச்சயதார்த்தம் ஆகியவை நேற்று நடைபெற்றது. இதையடுத்து இந்த காதல் ஜோடிகள் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் நமீதா மாரிமுத்து செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

இதில் ஜீ தமிழ் சீரியல்களை சேர்ந்த நடிகர், நடிகைகள் என பலர் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் திருமணம் முடிந்ததும் ரேஷ்மாவுக்கு நடிகர் மதன் மெட்டி போடுகின்றவாறு வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் திருமணத்தில் இணைந்துள்ள இந்த காதல் ஜோடிக்கு வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!