ஜீ தமிழில் “அமுதாவும்…?” சீரியல் குறித்த அப்டேட் – கண்மணி ரசிகர்கள் உற்சாகம்!

0
ஜீ தமிழில்
ஜீ தமிழில் "அமுதாவும்...?" சீரியல் குறித்த அப்டேட் - கண்மணி ரசிகர்கள் உற்சாகம்!ஜீ தமிழில் "அமுதாவும்...?" சீரியல் குறித்த அப்டேட் - கண்மணி ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழில் “அமுதாவும்…?” சீரியல் குறித்த அப்டேட் – கண்மணி ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரம் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை கண்மணி தன்னுடைய புதிய சீரியல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் ஜீ தமிழில் அவர் நடிக்க இருந்த அமுதாவும்…? சீரியல் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை கண்மணி மனோகரன்:

சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பை தொடங்கி முதல் சீரியலிலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை கண்மணி மனோகரன். கண்மணி சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்த சீரியலில் இருந்து திடீரென விலக இருப்பதாக அறிவித்தார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? லீக்கான தகவல்கள்!

அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அவர் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இதுவரை அஞ்சலியாக பார்த்த ரசிகர்களுக்கு கண்மணியின் இந்த புது அவதாரம் ரசிக்க வைத்தது. மேலும் கண்மணி ஜீ தமிழில் அமுதாவும்…? என்ற சீரியலில் நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவில் படிப்பதற்காக ஆசைப்படும் பெண்ணாக அமுதா கதாபாத்திரம் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

கதாநாயகியாக அஞ்சலியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அதன் பின் சீரியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அது பற்றி கண்மணி தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த சீரியல் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here