செப்டம்பர் 7ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!

0
செப்டம்பர் 7ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்!
செப்டம்பர் 7ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்!
செப்டம்பர் 7ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!

பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை:

பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாகவே விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பெங்களூருக்கு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பெங்களூருவில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளால் செல்ல முடியாமல் பயங்கரமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி போக்குவரத்து நெரிசல் தகர்த்தப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரிச்மண்ட் சாலையிலும் அதிக அளவிலான வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், பெங்களூரில் உள்ள மாரத்தஹள்ளியில் உள்ள ஐடி நிறுவனம் முழுக்க வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – முக்கிய தகவல் வெளியீடு!

மேலும், எக்கோ வேர்ல்ட் மற்றும் அவுட்டர் ரிங் ரோடு அருகிலும் அதிக அளவிலான நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முடிந்த அளவிற்கு மழை நீர் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான உயர்மட்ட ஐடி மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய உள்கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், பெங்களூரு ரூரல், சிக்கபள்ளாபூர், சிக்கமகளூர், சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், கோலார், ராம்நகர், குடகு, சாமராஜநகர், மாண்டியா, மைசூரு, ஷிவமொக்கா மற்றும் துமகுரு ஆகிய மாவட்டங்களுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!