TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் WFH முறை? முழு விவரம் இதோ!

0
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - தொடரும் WFH முறை? முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - தொடரும் WFH முறை? முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் WFH முறை? முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான TCS, தனது ஊழியர்களை 2022ம் ஆண்டின் இறுதி மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

WFH முறை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக மேம்பட்டு வருவதால், தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்ப அழைத்து வருகின்றன. இருப்பினும், சில நிறுவனங்கள் ஹைப்ரிட் முறையில் வேலை செய்யத் தொடர்ந்து முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த CIEL HRன் சமீபத்திய கணக்கெடுப்பு, சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து நிரந்தர வேலையை உறுதிப்படுத்தும் என்று கூறுகிறது. தவிர, 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் தொலைதூர வேலை விருப்பத்தைத் தேர்வு செய்ய ஊழியர்களை அனுமதிக்கின்றன.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – தொடரும் முறைகேடுகள்! 2 லட்சம் போலி அட்டைகள் பறிமுதல்!

அந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் எதிர்காலத்தில் வீட்டில் இருந்து வேலை முறையை தொடர முடிவு செய்துள்ளன. இப்போது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்வது கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிப்பதற்கான ஒரு குறுகிய கால நடவடிக்கையாக காணப்பட்டது. ஆனால், சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தொலைதூரத்தில் இருந்து வேலை செய்ய அனுமதித்தால் மிகவும் திறமையாக செயல்பட முடியும் என்பதை தற்போது உணர்ந்துள்ளது. அதனால் கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான டிசிஎஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள்.

Exams Daily Mobile App Download

இது குறித்து நிறுவனத்தின் CEO & MD ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், 2023ம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுவனம் 20 சதவிகிதம் அலுவலகங்களிலிருந்தும், 80 சதவிகிதம் வீட்டிலிருந்து வேலை செய்யும் என்று கூறியுள்ளார். இப்போது, TCSன் 25-25 மாதிரியானது மக்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து, படிப்படியாக கலப்பின வேலை மாதிரிக்கு மாற்றுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மாதிரியின்படி, வரும் 2025 ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் 25 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!