தமிழக அமைச்சரவை கூட்டத்தில் DA பற்றிய அறிவிப்பு வெளியாகுமா? தகவல் வெளியீடு!

0
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் DA பற்றிய அறிவிப்பு வெளியாகுமா? தகவல் வெளியீடு!
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் DA பற்றிய அறிவிப்பு வெளியாகுமா? தகவல் வெளியீடு!
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் DA பற்றிய அறிவிப்பு வெளியாகுமா? தகவல் வெளியீடு!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூன் 27) நடைபெற இருக்கிறது. அதில் ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமைச்சரவை கூட்டம்:

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று (ஜூன் 27) மாலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் இறையன்பு போன்ற முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பத்திற்கு தேவையான அவசர சட்டம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து தமிழகம் முழுவதும் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்வது, புதிய தொழில்களுக்கு அனுமதி அளிப்பது, மேகதாது அணை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர் பார்த்து இருக்கின்றனர்.

TN TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

மேலும்,செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விவாதிக்க உள்ளதாகவும், சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய கொள்கைகள் உருவாக்கம் உள்ளிட்டவை குறித்து இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை சீர்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!