WhatsApp பெண் பயனர்கள் கவனத்திற்கு – அறிமுகமான புதிய வசதி!

0
WhatsApp பெண் பயனர்கள் கவனத்திற்கு - அறிமுகமான புதிய வசதி!
WhatsApp பெண் பயனர்கள் கவனத்திற்கு - அறிமுகமான புதிய வசதி!
WhatsApp பெண் பயனர்கள் கவனத்திற்கு – அறிமுகமான புதிய வசதி!

உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் யூசர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் எப்போதும் தனது பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் முக்கிய அப்டேட்டுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெண் பயனர்களுக்கு உதவும் வகையில் பீரியட் டிராக்கர் (மாதவிடாய் கண்காணிப்பு) வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

புதிய வசதி:

வாட்ஸ்அப்,பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கரை அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கான சுகாதார பிராண்டான சிரோனா ஹைஜீன், வாட்ஸ்அப் உடன் இணைந்து, இந்தியாவின் முதல் பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இதுகுறித்து சிரோனா ஹைஜீன் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீப் பஜாஜ் கூறியது, வாட்ஸ் அப் மூலம் எங்கள் பயனர்களுக்கு எளிதாக அணுகலை வழங்க AI தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். இது எங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பீரியட் டிராக்கிங் கருவி மூலம் மாதவிடாய், கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்தைத் தவிர்ப்பது போன்ற மூன்று இலக்குகளைக் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் அவற்றின் கடைசி கால விவரங்களை வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் உள்ளிட வேண்டும். அந்த பதிவை வைத்து, பயனரின் மாதவிடாய் தேதியை நினைவூட்டூதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகளைப் வாட்ஸ்அப்பில் பகிரப்படும். சிரோனாவின் இந்த முயற்சி பெண்களுக்கு மிகுந்த பயனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை – விண்ணப்ப பதிவு துவக்கம்!

பெண் பயனர்கள் செய்ய வேண்டியவை:
  • 9718866644 என்ற எண்ணிற்கு `ஹாய்’ என்று அனுப்பிவிட்டு, மொபைலில் அந்த எண்ணை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் சிரோனா, சில கேள்விகளை கேட்கும். அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட வேண்டும்.
  • தொடர்ந்து பீரியட் ட்ராக்கர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது, உங்களுக்கு ரத்தப்போக்கு எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கேள்விகள் கேட்கப்படும்.
  • அந்த விவரங்களை கொடுத்தபின், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும், கருமுட்டை உருவாக்கம் – கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் நாட்கள் – அடுத்த மாதவிடாய் காலம் உள்ளிட்டவை விரிவாக வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!