தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? அரசு செய்ய வேண்டியது என்ன!
தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகின்ற சூழலில் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டு வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதன் காரணமாக தமிழகத்தில் தளர்வுகள் அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் தமிழக அரசிற்கு தற்போது நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்வதற்காக மட்டுமே தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தளர்வுகளில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளித்தால், பாதிப்பு மேலும் அதிகரிக்க தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு – ஷார்ஜா மன்னர் அறிவிப்பு!!
வேண்டுமெனில் டாஸ்மாக், பத்திரப்பதிவு மற்றும் கட்டட தொழில்கள் ஆகிய மூன்றுக்கு மட்டும் தகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கலாம். மேலும் சிறு வியாபாரிகள் கடைகள் திறக்க அனுமதி வழங்கலாம். மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் தற்போது குறைந்துள்ள கொரோனா பாதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வேகமெடுக்க தொடங்கிவிடும் என்றும் அதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு ஆலோசித்து விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Lockdown details