DNA டெஸ்டில் பாரதிக்கு தெரிய வரும் உண்மை? சீரியலில் நிகழ இருக்கும் அடுத்த திருப்பம்!

0
DNA டெஸ்டில் பாரதிக்கு தெரிய வரும் உண்மை? சீரியலில் நிகழ இருக்கும் அடுத்த திருப்பம்!
DNA டெஸ்டில் பாரதிக்கு தெரிய வரும் உண்மை? சீரியலில் நிகழ இருக்கும் அடுத்த திருப்பம்!
DNA டெஸ்டில் பாரதிக்கு தெரிய வரும் உண்மை? சீரியலில் நிகழ இருக்கும் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த வார கதைக்களத்தில் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் DNA டெஸ்ட் எடுக்க செல்லும் பாரதிக்கு குழந்தை பிறப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பது தெரிய வருவது போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் DNA டெஸ்ட் தொடர்பான கதைக்களம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த வார எபிசோடுகளில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா மீதுள்ள சந்தேகத்தினால் அவரை வீட்டை விட்டு அனுப்பி விடும் பாரதி இன்று வரையும் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார். இதற்கிடையில் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை லட்சுமி, பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மையை அறிந்து கொள்கிறார். மறுபக்கத்தில் பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் தோல்வியுற்று வருகின்றனர் சௌந்தர்யா குடும்பத்தினர்.

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு – மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

இப்படிப்பட்ட சூழலில் பாரதி எப்போது கண்ணம்மா பற்றிய உண்மையை அறிந்து கொள்வார், எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் DNA டெஸ்ட் மட்டும் எடுத்தால் பாரதிக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வந்து விடும். இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த வார கதைக்களத்தில் பாரதி DNA டெஸ்ட் எடுக்க இருப்பது போல பரபரப்பான ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

அதாவது, கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் பாரதிக்கு எதிராக நிற்பதாக கூறி சௌந்தர்யாவிடம் கோபப்படும் பாரதி வீட்டில் உள்ள ஒருவரிடமும் சொல்லாமல் DNA டெஸ்ட் எடுப்பதற்காக செல்கிறார். அவ்வாறு மருத்துவமனையில் வைத்து DNA டெஸ்ட் ரிசல்ட்டை பார்க்கும் பாரதிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதாவது, DNA ரிசல்டில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு பாரதிக்கு 100 சதவீதம் இருப்பது தெரிய வருகிறது. இதனால் மனமுடையும் பாரதி, இதுவரை கண்ணம்மாவுக்கு ஏற்படுத்திய அவமானங்கள் எல்லாவற்றையும் நினைத்து பெரிய தவறு செய்து விட்டதற்காக வருந்துவது போல அந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!