TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH!

0
TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் WFH!
TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் WFH!
TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் IT நிறுவனங்கள் முதல் தொடக்க நிறுவனங்கள் வரை, அனைவரும் ‘WORK FROM HOME’ முறையை குறைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் பிற நிறுவனங்களின் பணியாளர்களில் 50% பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தகவல் வெளியீடு:

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன. பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘WORK FROM HOME’ முறையை தொடர்ந்து வருகின்றன. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் சீன அதிகாரிகள் மக்களை WFH க்கு மாறுமாறு வலியுறுத்துகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும் இந்தியாவிலும் தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து சூழலில், இந்தியாவில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலத்திற்கு திரும்பும் படி அழைத்து வருகின்றன.இதனால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில், கூகுள் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களுக்கான மாதாந்திர சந்தா திட்டத்தின் வாக்குறுதியுடன், அலுவலகத்திற்கு திரும்புமாறு அதன் ஊழியர்களை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் HR தலைவர், இன்ஃபோசிஸ் நிறுவனமும் எதிர்காலத்தில் ஹைப்ரிட் மாதிரி வேலைகளைத் தொடர உள்ளதாவும் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து TCS இன் 25-25 மாடல், மக்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான HCL, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், அதுவும் ஹைப்ரிட் மாடலை நோக்கிச் செல்கிறது.

தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைத்த பாக்கியா, கோவப்பட்ட கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

FMCG நிறுவனமான நெஸ்லே, ஹைப்ரிட் மாதிரி வேலைகளைத் தொடர திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், மே 2 ஆம் தேதிக்குள், ஊழியர்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 2 நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அறிவித்தது. இருப்பினும், இந்த அறிவிப்பு ஊழியர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை மற்றும் கிட்டத்தட்ட 76% தொழிலாளர்கள் நிறுவனத்தின் அலுவலகக்கொள்கைக்குத் திரும்புவதற்கு எதிராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!