தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை – விஜயகாந்த் பாராட்டு!
தமிழகத்தில் அரசு, காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது காவலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்று கூறி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாததாகும். கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆனால் காவலர்கள் தொற்று பரவும் அச்சத்திலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இரவு, பகல் பாராது ஓயாது மக்களுக்காக பணி செய்து வந்தனர். ஏராளமான காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது தமிழக காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
நாளை முதல் செப்டம்பர் 1 வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். விடுப்பு வழங்கப்படுவதால் காவலர்கள் மன அழுத்தம் இன்றி தொடர்ந்து பணியை சிறப்பாக செய்ய முடியும் என கூறினார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து விஜயகாந்த் இதனை வரவேற்றுள்ளார். காவலர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி இருப்பது அவர்களுக்கு இனிய செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.