1000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் – Wayfair வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0
1000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் - Wayfair வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
1000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் - Wayfair வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
1000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் – Wayfair வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Wayfair நிறுவனம் கடந்த ஒரு வருடமாக சற்று சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தகவல் அந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் பணி நீக்கம்:

உலக அளவில் கடந்த 2022ம் ஆண்டு நிலவிய பொருளாதார சரிவு நிலை காரணமாக அமேசான், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைக்க குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. குறிப்பாக ஐடி துறையில் ஊழியர்கள் கொத்து கொத்தாக வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் சுமார் 18,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்ததாக மிக பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆன்லைன் விற்பனை நிறுவனமான Wayfair 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இதே நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு விற்பனை சரிவின் காரணமாக சுமார் 870 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது. இந்த எண்ணிக்கை மொத்த ஊழியர்களில் 5% ஆகும். இந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களிலேயே மீண்டும் ஆட்கள் குறைப்பு குறித்து தகவல் வந்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!