SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – KYC அப்டேட்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - KYC அப்டேட்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு - KYC அப்டேட்!

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – KYC அப்டேட்!

தற்போது KYC செயல்முறையை முடிக்காத SBI வங்கியின் வாடிக்கையாளர்களது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த KYCஐ ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.

KYC அப்டேட்

சமீபத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். அதாவது, வங்கி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, KYC விதிமுறைகளுக்கு இணங்காத பல வாடிக்கையாளர்களின் கணக்குகளை SBI முடக்கியுள்ளது. இதை தொடர்ந்து எழுப்பப்பட்ட புகார்களுக்கு பதிலளித்த எஸ்பிஐ நிர்வாகம், ‘ஆர்பிஐ ஆணையின்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சியை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? அமைச்சர் விளக்கம்!

எனவே, KYC அப்டேட் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு SMS போன்ற பல சேனல்கள் மூலம் எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் இதுவரை KYC அப்டேட் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை நிர்வாகம் முடக்கியுள்ளது. இப்போது பயனர்கள் ஏதேனும் ஒரு கிளைக்கு சென்று அவர்களின் KYC விவரங்களை புதுப்பிக்கலாம். அல்லது அவர்களின் KYC ஆவணங்களுக்கான நகலை உங்கள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி மூலம் கிளை மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் SBI வாடிக்கையாளர்கள் தங்களது KYC விவரங்களை புதுப்பிக்க, அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழின் நகலை மின்னஞ்சல் மூலம் தங்கள் வங்கிக் கிளைக்கு அனுப்பி செயல்முறையை முடிக்கலாம். மறுபக்கத்தில் ஆன்லைன் வழியை தேர்வுசெய்தால், தேவையான ஆவணங்களையும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து கிளையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்போது SBI இணையதளத்தின்படி, KYCஐ புதுப்பிப்பதற்கான அடையாள அல்லது முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தனிநபர்களுக்கு:

  • கடவுச்சீட்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஓட்டுனர் உரிமம்
  • ஆதார் கடிதம்/அட்டை
  • NREGA அட்டை
  • பான் கார்டு
  • அடையாளச் சான்று மற்றும் முகவரிக்கான சான்று தொடர்பான ஏதேனும் ஒரு ஆவணம்.

சிறிய கணக்குகளுக்கு:

  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஓட்டுனர் உரிமம்
  • ஆதார் அட்டை
  • NREGA அட்டை
  • பான் கார்டு
  • அடையாளச் சான்று மற்றும் முகவரிக்கான சான்று தொடர்பான ஏதேனும் ஒரு ஆவணம்.

சிறிய கணக்குகளுக்கு:

குழந்தைகளை பொறுத்தவரை, 10 வயதுக்குட்பட்டவராக இருந்தால், கணக்கை நிர்வகிக்கும் நபருக்கான அடையாள ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு மைனர் தனது கணக்கை தன்னிச்சையாக நிர்வகிக்கும் போது, ஒரு தனிநபரின் முகவரியை கண்டறிந்து சரிபார்ப்பதற்கான அதே KYC அணுகுமுறை பயன்படுத்தப்படும்.

என்ஆர்ஐ கணக்குகளுக்கு:

  • பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விசா நகல்கள்
  • வெளிநாட்டு அலுவலகங்கள்
  • னுமதி பெற்ற பத்திரத்துறை பதிவு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!