மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" விஜே தீபிகா - ரசிகர்கள் வாழ்த்து மழை!
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து கதைக்கு திருப்பு முனையாக இருந்தவர் விஜே தீபிகா. அவர் முகப்பரு பிரச்சனையால் சீரியலில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

நடிகை விஜே தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் வெற்றி கண்ட சீரியல் கதையை கொண்டுள்ளது. குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்துவதே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. காசு பணம் இருந்தாலும் குடும்ப ஒற்றுமை தான் முக்கியம் என்பதற்கு இந்த சீரியல் உதாரணமாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வந்தாலும் கதையில் திருப்புமுனையை கொண்டு வந்தது ஐஸ்வர்யா கதாபாத்திரம். கடைசி தம்பி கண்ணனிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை விஜே தீபிகா நடித்து வந்தார்.

இனியாவா? மயூராவா? இரு குழந்தைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோபி – எடுக்கப்போகும் முடிவு என்ன?

அவருடைய நடிப்பு திறமையால் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். இருவரும் சீரியலை தவிர்த்து நண்பர்களாக பழகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஜோடியாக இவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜே தீபிகா முகப்பரு பிரச்சனையால் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். மேக்கப் போடுவதால் அவருக்கு பிரச்சனை அதிகமாக இருக்கிறது. அதனால் அவரை நீக்கியதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அதன் பின் மன வருத்தத்தில் இருந்த தீபிகா தற்போது தன்னுடைய முகப்பரு பிரச்சனையை சரி செய்து இருக்கிறார்.

இந்நிலையில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறார். பல போட்டோஷூட்களையும், இன்ஸ்டாவில் நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுடன் நெருக்கத்தில் இருக்கிறார். தற்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கலர்ஸ் தமிழில் சில்லுனு ஒரு காதல் சீரியலில் புதியதாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!