100 ஒருநாள் போட்டிகள் கொண்ட எலைட் பட்டியலில் இணையும் விராட் கோஹ்லி – ரசிகர்கள் உற்சாகம்!

0
100 ஒருநாள் போட்டிகள் கொண்ட எலைட் பட்டியலில் இணையும் விராட் கோஹ்லி - ரசிகர்கள் உற்சாகம்!
100 ஒருநாள் போட்டிகள் கொண்ட எலைட் பட்டியலில் இணையும் விராட் கோஹ்லி - ரசிகர்கள் உற்சாகம்!
100 ஒருநாள் போட்டிகள் கொண்ட எலைட் பட்டியலில் இணையும் விராட் கோஹ்லி – ரசிகர்கள் உற்சாகம்!

சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், யுவராஜ் சிங் மற்றும் எம் எஸ் தோனி ஆகியோருக்குப் பிறகு சொந்த மண்ணில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 5வது இந்திய கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி திகழ்கிறார்.

ரசிகர்கள் உற்சாகம்:

இந்தியா வெஸ்ட் இண்டிஸ் இடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3-1 என முன்னிலையில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி தற்போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. மீதம் உள்ள 3 வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 11 ஆம் தேதியிலும் இதனை தொடர்ந்து டி20 தொடர் பிப்ரவரி 16,18,20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு போலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகளில் விளையாடி 2 யில் தோல்வியடைந்து தொடரை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், யுவராஜ் சிங் மற்றும் எம் எஸ் தோனி ஆகியோருக்குப் பிறகு சொந்த மண்ணில் தனது 100 வது ஒருநாள் போட்டியை விராட் கோஹ்லி விளையாடுகிறார். இதனால் விராட் கோஹ்லி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி சொந்த மண்ணில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 36 வது கிரிக்கெட் வீரராகவும், இந்தியாவில் இருந்து ஐந்தாவது வீரராகவும் திகழ்கிறார். 99 ஒருநாள் போட்டிகளில், கோஹ்லி 96 இன்னிங்ஸில் 59.64 சராசரியில் 19 சதங்கள் மற்றும் 25 அரை சதங்களுடன் 5002 ரன்களைக் குவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தும் வகுப்புக்கு வராத மாணவர்கள் – ஷாக் ரிப்போர்ட்!

சொந்த மண்ணில் 99 ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி சாதனையை இன்னும் எந்த வீரரும் முறியடிக்க வில்லை. இந்திய மண்ணில் அதிக ரன்கள் எடுத்தப் பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடத்தில் இருக்கிறார். பட்டியலில் அடுத்த சிறந்த வீரர் சச்சின், இந்தியாவில் தனது 99வது ஒருநாள் போட்டியில் 4231 ரன்களை குவித்திருந்தார். ஆஸியின் சிறந்த மற்றும் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூட சொந்த மண்ணில் தனது முதல் 99 போட்டிகளில் 3497 ரன்களை குவித்து தரவரிசை பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். எனவே கோஹ்லி இந்த ஆண்டு அதிக சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!