ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான எளிய வழிமுறைகளை பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு:

நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்திற்காக அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பலனடையும் ஒருவர் இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது.

தமிழகத்தில் அரசு பேருந்து சேவைகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் பேர் மட்டுமே இணைத்துள்ளனர். இதற்கான ஆன்லைன் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

 • முதலில் அரசின் https://tnpds.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.
 • அதில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவு செய்து கிளிக் செய்தால் 7 இலக்க ஓடிபி எண் வரும்.
 • அதனை தேவையான இடத்தில் கொடுத்து மற்றொரு பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
 • அந்த பக்கத்தில், ஆதார் எண்கள் என்பதை கிளிக் செய்து, இப்பொழுது, உங்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் இருக்கும்.
 • அதில், ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால், ஸ்கேன் என்பதை தேர்வு செய்து ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மற்றொரு முறை:

 • ரேஷன் கார்டில் ஆதாரினை பதிவு செய்வதற்கு uidai ன் அதிகாரபூர்வ தளத்தின் மூலமாகவும் செய்யலாம்.
 • முதலில், https://uidai.gov.in/ என்ற அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
 • அதில், start now என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது, உங்களது முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, ரேஷன் கார்டு பெனிபிட் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
 • இப்பொழுது, அந்த பக்கத்தில் உங்களது ஆதார் கார்டு நம்பர் மற்றும் இமெயில் ஐடி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
 • பின்னர், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
 • ஓடிபியை உள்ளிட்டு, சமர்ப்பித்தால் உடனே உங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பு புதுப்பிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here