விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் சரஸ்வதி சபதம் – அடுத்து நடக்கப்போவது என்ன?

0
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் சரஸ்வதி சபதம் - அடுத்து நடக்கப்போவது என்ன?
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் சரஸ்வதி சபதம் - அடுத்து நடக்கப்போவது என்ன?
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் சரஸ்வதி சபதம் – அடுத்து நடக்கப்போவது என்ன?

விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பமாகிய சீரியல் தமிழும் சரஸ்வதியும். பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி தொடர் வரிசையில் இந்த சீரியலும் வெற்றி நடை போடுகிறது. இந்நிலையில் தொடரில் சரஸ்வதி சபதம் எடுத்துள்ளது போன்ற ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சரஸ்வதி சபதம்:

பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் எப்பொழுதும் ஹிட் கொடுத்து வரும் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் இடையே ஆதரவை பெற்று வருகிறது. இதில் தொகுப்பாளர்களாகிய தீபக் ஹீரோவாகவும், நட்சத்ரா ஹீரோயின் ரோலில் நடித்து வருகிறார்கள். தன் படிக்காத மகனுக்கு படித்த பெண்ணை திருமணம் செய்ய விருப்பப்பட்ட தமிழின் அம்மாவுக்கு கடவுள் போட்ட முடிச்சாக சரஸ்வதி படித்தவளாக கருத்தப்பட்டாள்.

ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம், அதிர்ச்சியில் பாக்கியா – சீரியலில் இந்த வாரம்!

உண்மையாகவே சரஸ்வதி 12 வது கூட தேர்ச்சி பெறாதவர். இந்த உண்மையை அறிந்த கோதை அன்றே தனது நிறுவனத்தில் ஜி எம் ஆக இருந்த தன் மகன் தமிழின் பதவி பறிக்கப்பட்டு அதே நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சூழல் உண்டாகிறது. அதை தொடர்ந்து வெளியாகியுள்ள ப்ரோமோவில் இதை கேள்வி பட்ட சரஸ்வதி தன்னால் தானே இந்த நிலைமை என்ற குற்ற உணர்ச்சியால் தமிழின் தம்பி கார்த்திக்கை சந்திக்க நிறுவனத்திற்கு செல்கிறார்.

தனது நண்பருடன் சண்டையிட்ட “பாரதி கண்ணம்மா” பரீனா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

அப்போது இதை குறித்து சரஸ்வதி கார்த்திக்கிடம் கேட்க அதற்கு அவர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம +2 வில் பெயிலானதை குத்தி காமித்து பேசுகிறார். அதற்கு சரஸ்வதியோ நான் கூடிய விரைவில் எம்.பி.ஏ தேர்ச்சி பெறுவேன் என கூறியதை கேட்ட கார்த்திக் முதல்ல +2 தேர்ச்சி பெற்றுவிட்டு அடுத்து இத பத்தி யோசி என்று அவமரியாதையாக பேசுகிறார். உடனே சரஸ்வதி சபதம் போன்று சின்னத்திரையிலும் சரஸ்வதி கார்த்திக்கிடம் நான் +2 பாஸ் பெறுவேன் என்று சபதத்தை கூறி மேலும், பாஸ் செய்தவுடன் தமிழுக்கு மீண்டும் அந்த பதவியை அளிக்க வேண்டும் என கூறுகிறார். அந்த சவாலை கார்த்திக் ஏற்றுக் கொள்வது போன்று ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!