CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு டப் கொடுக்கும் பவுலர்ஸ் இவர்கள் தான்? ரசிகர்கள் கவனத்திற்கு!

0
CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு டப் கொடுக்கும் பவுலர்ஸ் இவர்கள் தான்? ரசிகர்கள் கவனத்திற்கு!
CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு டப் கொடுக்கும் பவுலர்ஸ் இவர்கள் தான்? ரசிகர்கள் கவனத்திற்கு!
CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு டப் கொடுக்கும் பவுலர்ஸ் இவர்கள் தான்? ரசிகர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல் 2022 போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் CSK அணிக்கு டப் கொடுக்கக்கூடிய 3 கொல்கத்தா பவுலர்களை பற்றி ஒரு சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

CSK அணி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 26ம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து துவங்க இருக்கிறது. இந்த போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் 7 நாட்களே மீதமிருக்கும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் பலப்பரீட்சை காண இருக்கிறது.

IPL வரலாற்றில் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிய சிஎஸ்கே அணி 12 முறை கேகேஆரை வீழ்த்தியுள்ளது. மறுபுறம், KKR அணி ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் CSK அணியின் ஆட்டமே மேலோங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் CSK அணிக்கு டப் கொடுக்கக்கூடிய சில பவுலர்கள் KKR அணியில் இடம்பெற்றுள்ளதால் போட்டியில் ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நிரூபணமாகிறது.

IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – போட்டி அட்டவணை, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள்!

ஏற்கனவே CSK அணியில் தீபக் சஹார் இல்லாதது பெரும் பின்னடைவாக கருத்தப்படக்கூடிய சூழலில், பேட்ஸ்மேன்கள் அனைவரும் கண்டிப்பாக KKR அணியின் பவுலிங்கை சமாளித்தாக வேண்டும். இப்போது ஐபிஎல்லில் CSK vs KKR போட்டிகளில் CSKக்கு எதிராக அதிகளவு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும் KKR பந்துவீச்சாளர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஆண்ட்ரே ரஸல்:

சிஎஸ்கே அணிக்கு எதிரான பேட்டிங்கை விட ரசல் பந்து வீச்சில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விக்கெட்டுகளை எடுப்பதில் கேகேஆர் எப்போதும் கடுமையான ஃபைட் கொடுத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 11 ஆட்டங்களில் பந்துவீசி ரசல் 8 விக்கெட்டுகளை அதுவும் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

பியூஸ் சாவ்லா:

ஐபிஎல் வரலாற்றில் அதிகளவு விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பட்டியலில் சாவ்லா முதல் ஐந்து இடத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் 2014-2019 க்கு இடையில் KKR அணிக்காக மட்டும் 66 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக, ஐபிஎல்லில் 157 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் பியூஸ் சாவ்லா. இவர் சென்னைக்கு எதிராக 14 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

CSK அணியின் கேப்டன் ‘தல’ தோனியின் 7ம் எண் ஜெர்சி சீக்ரெட் இது தான்? ரசிகர்கள் உற்சாகம்!

சுனில் நரைன்:

பல ஆண்டுகளாக CSK vs KKR போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்சுனில் நரைன். ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக மட்டுமே விளையாடி அவர் இதுவரை 143 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த வகையில் IPL லீக்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் சுனில் நரைன் ஆவார். இவர் வரும் சீசனில் 150 விக்கெட்டுகளை கடக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னைக்கு எதிராக 16 ஆட்டங்களில் விளையாடி 20 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!