அப்பாவான விஜய் டிவி பிரபலம் – வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!

0
அப்பாவான விஜய் டிவி பிரபலம் - வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!
அப்பாவான விஜய் டிவி பிரபலம் - வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!
அப்பாவான விஜய் டிவி பிரபலம் – வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!

விஜய் டிவி ஹீரோ வினோத் பாபு தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழந்தையையும், தம்பதியினரையும் வாழ்த்தி வருகின்றனர்.

விஜய் டிவி பிரபலம்:

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வினோத் பாபு. அந்த நிகழ்ச்சி அவரை மக்கள் வந்து பிரபலமாக்கியது. அதையடுத்து ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தார். அதில் சீரியலில் இல்லாத அரசியல் கதைகளம் இருந்தது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட தொடர் மற்றும் அதில், நடிக்கும் நடிகர், நடிகையரின் நேர்த்தியான நடிப்பினால் மிகவும் பிரபலமாகியது.

ஜெனி அப்பாவிடம் சண்டை போடும் ஈஸ்வரி, செழியனுக்கு ஆறுதல் சொன்ன கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

வினோத் பாபு கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலிலும் நடித்துள்ளார். அதன்பிறகு, தனது மனைவி சிந்து உடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், இவர்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவர்கள் அந்த போட்டியின் டைட்டில் வின்னராக வெற்றியையும் பெற்றனர். தற்போது தென்றல் வந்து என்னைத் தீண்டும் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் வினோத் பாபு. அவர் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக வினோத் பாபு தெரிவித்திருந்தார்.

ஜீவாவிடம் கோவித்துக் கொள்ளும் மீனா, பெயர் சூட்டு விழாவில் நடக்க இருக்கும் பிரச்சனை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அவரது மனைவி சிந்துவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நிறைய பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர். கர்ப்பகாலத்தில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், சிந்துவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை வினோத்பாபு மிகவும் மகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!