
சிறிய வீட்டில் இருப்பதை நினைத்து வருத்தப்படும் கதிர்.. ஒற்றுமையாக இருப்பதே சந்தோசமாக நினைக்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவும் ஐஸ்வர்யாவும் படுக்க சண்டை போட எல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம் என தனம் சொல்கிறார். பின் கதிர் வீட்டில் அனைவருக்கும் வசதி இருக்காது என நினைத்து கவலைப்பட, ஆனால் எல்லாரிடமும் சேர்ந்து இருப்பதை நினைத்து தனம் சந்தோசப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஜீவா அருகே தான் படுப்பேன் என சொல்ல, ஐஸ்வர்யா நானும் கண்ணன் அருகே தான் படுப்பேன் என சொல்கிறார். உடனே தனம் அதெல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் மூர்த்தி புது வீடு கட்டியதும் நாம எல்லாரும் தூங்க இடம் கிடைக்கும் என சொல்கிறார். உடனே மீனா எல்லாருக்கும் தனி தனி அறை வேண்டும் என சொல்கிறார். பின் கதிர் வீடு வசதி இல்லை என்றால் வேற வீடு பார்க்க சொல்வோமா என கேட்க, மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் கண்ணன் மூர்த்தியை கதை சொல்ல சொல்கிறார். அப்போது மீனா கொசு அடிக்க, நாளைக்கு கயல், பாண்டியனுக்கு கொசு வலை வாங்கிவிடுவோம் என சொல்கிறார்
Follow our Instagram for more Latest Updates
பின் மீனா எங்களுக்கும் கொசு வலை வேண்டும் என சொல்ல, உடனே தனம் அவனே வசதி இல்லாமல் தங்க வைத்து இருப்பதால் கவலையில் இருக்கிறார்கள் என சொல்கிறார். பின் கதிர் இங்கே வசதி போதாது என சொல்ல, ஆனால் மூர்த்தி தனம் எல்லாரும் ஒன்றாக இருப்பது தான் சந்தோசம் என சொல்கிறார். பின் அனைவரும் கொசு கடியால் கஷ்டப்படுவதை பார்த்து கதிர் வருத்தப்படுகிறார். பின் முல்லை தனது அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்க, முல்லை உங்களை சரியாக கவனிக்கவில்லை என சொல்கிறார். அப்போது கதிரை காணவில்லை என முல்லை தேடி, கதிர் கடைக்கு சென்றுவிட்டு வருகிறார். பின் வீடு வசதி போதாது என சொல்ல, முல்லை எல்லாருக்கும் வீட்டில் சமைக்கலாம் என சொல்கிறார். உடனே கதிர் அதெல்லாம் வேண்டாம் கடையில் சமைக்கலாம் என சொல்கிறார்.
இப்படி எல்லாரும் வந்துவிடுவார்கள் என தெரிந்தால் பெரிய வீட்டை பார்த்து இருக்கலாம் என சொல்கிறார். பின் அனைவரும் தூங்கி எழுந்திரிக்க, மூர்த்தி கதிர் எங்கே என கேட்கிறார். அப்போது முல்லை அவங்க கடைக்கு சென்று இருப்பதாக சொல்கிறார். பின் மூர்த்தி இவ்வளவு சீக்கிரமாக போக வேண்டுமா என கேட்க ஆமாம் என முல்லை சொல்கிறார். முல்லை இங்கே வசதி இல்லாமல் இருக்க வருத்தம் இல்லையே என கேட்க, இல்லை என மூர்த்தி சொல்கிறார்.
தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு – வெளியான வயது வாரியான விவரம்!
நாம சந்தோசமாக இருக்க வேண்டியது தான் முக்கியம் என ஜீவா சொல்ல, முல்லை நான் அவரிடம் சொல்கிறேன் என சொல்கிறார். பின் தனம் கண்ணன் ஐஸ்வர்யா மீனாவை எழுப்புகின்றனர். கண்ணன் எழுந்து நான் எங்கே இருக்கேன் இது என்ன புது இடமாக இருக்கிறது என கேட்கிறார். என்னை யாராவது கடத்தி கொண்டு வந்துவிட்டார்களா என கேட்க, எல்லாரும் ஆமாம் உன்னை கடத்தி என்ன பயன் என நக்கலாக பேசுகிறார். பின் ஐஸ்வர்யா மீனாவை அனைவரும் எழுப்புகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.