விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நிகழ்த்திய அசத்தல் சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் நிகழ்த்திய அசத்தல் சாதனை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நிகழ்த்திய அசத்தல் சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவியில் நெடுந்தொடராக பல எபிசோடுகளை கடந்தும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு இன்னும் அரைத்த மாவையே அரைப்பது போல் ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதையை ஓயாது ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நட்சத்திரங்கள் தற்போது ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்ட போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது வித்தியாசமான நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் தான். அப்படி விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் பல நட்சத்திரங்களை விஜய் டிவி சீரியல்கள் உருவாகியுள்ளது. ஏனெனில் கதைகளில் ஒரு ஆர்வமும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். இவ்வாறு கதைக்களத்தை தாண்டி அதில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கே அதிகளவு ரசிகர் பெருமக்கள் உள்ளார்கள்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக புது நடிகை என்ட்ரி? ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!

அந்த வரிசையில் அதிக எபிசோடுகளை கடந்தும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் அதிகரித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நேற்றுடன் 900 எபிசோடுகளை ஒளிபரப்பாக்கியுள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளனர். மேலும் விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

விஜய் டிவியின் பெரிய வெற்றி தொடராக விளங்கும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 900 எபிசோடுகளை கடந்துள்ளதால் அதிலுள்ள நட்சத்திரங்கள் இந்த பெரிய வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்களும் மேலும் பல எபிசோடுகளை கடக்க வேண்டும் என சொல்லி வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here