விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக புது நடிகை என்ட்ரி? ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பாவாக புது நடிகை என்ட்ரி? ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பாவாக புது நடிகை என்ட்ரி? ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக புது நடிகை என்ட்ரி? ரசிகர்களை ஷாக் ஆக்கிய ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் அதிக பார்வையாளர்களையும், அதற்கு சமமான விமர்சனங்களையும் பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது திருப்பங்களுக்கு மாற்றாக புது வருகையாக சில நடிகைகள் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள்.

பாரதி கண்ணம்மா:

சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் தவறாது முதல் ஐந்துக்குள் இடம் பெற்று வரும் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர் பாரதி கண்ணம்மா தொடர்ந்து பல புது திருப்பங்களை கொண்டு நகர்கிறது. ஆரம்ப காலத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் எப்படி விமர்சனங்களோடு கூடிய ரீச் பெற்றதோ அது போலவே தொடர்ந்து ஒவ்வொரு காட்சிகளும் நெட்டிசன்களுக்கு தவறாமல் வேலை கொடுத்து விடுகிறது.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பரபரப்பான ட்விஸ்ட் ரிலீஸ்!

இவ்வாறு எவ்வளவு தான் விமர்சங்களை பெற்றாலும் இந்த சீரியலை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடந்த எபிசோடில் சென்னையில் ஒரு நாள் படத்தின் காட்சிகளை போலவே சீரியலின் கதைக்களத்தை புது டிராக்குக்கு எடுத்து செல்ல விரும்பி இறுதியில் மிஞ்சியது விமர்சனங்கள் மட்டுமே. தற்போது லட்சுமிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என தெரிந்துகொண்ட விஷயம் வீட்டில் உள்ள எல்லாருக்கும் கண்ணம்மா மூலம் வெளிவர அதை குறித்து தொடர் நகர்கிறது.

தற்போது சீரியலில் புது கதைக்களத்தை கொடுத்து ஓய்ந்து விட்டார்களோ என்னவோ! புது என்ட்ரியை காட்ட போகிறார்கள். அதாவது சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் விலகியதை அடுத்து தொடர்ந்து பலரும் வெளியேறினார்கள். ஆனால் தற்போது மீண்டும் புது வருகையாக சன் தொலைக்காட்சியில் தென்றல் சீரியலில் நடித்த ஸ்ருதி அவர்கள் வர உள்ளதாகவும் மேலும், வெண்பாவுக்கு பதிலாக அசுரன் படத்தில் நடித்து ஹிட் கொடுத்த அபிராமி நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை காத்திருந்து பார்ப்போம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!