கோடை கொண்டாட்டமாக புது முயற்சியில் இறங்கியுள்ள விஜய் டிவி – குஷியில் ரசிகர்கள்!

0
கோடை கொண்டாட்டமாக புது முயற்சியில் இறங்கியுள்ள விஜய் டிவி - குஷியில் ரசிகர்கள்!
கோடை கொண்டாட்டமாக புது முயற்சியில் இறங்கியுள்ள விஜய் டிவி - குஷியில் ரசிகர்கள்!
கோடை கொண்டாட்டமாக புது முயற்சியில் இறங்கியுள்ள விஜய் டிவி – குஷியில் ரசிகர்கள்!

விஜய் டிவி நிறுவனம் ரசிகர் பெருமக்களை மகிழ்விக்கும் விதமாக கோடை கொண்டாட்டமாக ‘நட்சத்திர கொண்டாட்டம்’ என்ற பெயரில் புது நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் நாளையும் என்ட்ரி கட்டணம் இல்லாமல் இலவசமாக நடைபெறும் எனவும் விஜய் டிவி அறிவித்துள்ளது. மேலும், எந்தெந்த நாளுக்கு எங்கெங்கு நிகழவிருக்கிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி கோடை கொண்டாட்டம் :

ஆரம்பமாகிய தொடக்கத்தில் இருந்தே தனது தொலைக்காட்சியின் கலைஞர்களை கௌரவிக்கவும், முன்னேற்றத்தில் பங்காகவும் இருக்க விஜய் டிவி ஒரு நாளும் மறந்ததில்லை. அதனால் தான் என்னவோ அன்றிலிருந்து இன்று வரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என அனைத்திலும் முன்னணியில் உள்ளது. விஜய் டிவிக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு விஜய் டிவியை அடித்து கொள்ள ஆளே இல்லை.

Exams Daily Mobile App Download

சமீபத்தில் கூட இந்த ஆண்டுக்கான விருது விழா கொரோனா காலத்தில் இருந்த எந்தவொரு தடைகளும் இன்றி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும், ஒரு புது முயற்சியாக கோடை கொண்டாட்டமாக விஜய் நட்சத்திர கொண்டாட்ட திட்டத்தை விஜய் டிவி மேற்கொண்டுள்ளது. மே மாதம் முழுவதும் வாரயிறுதியில் ஒவ்வொரு மாவட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு விருப்பமான பாரதி கண்ணம்மா, குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின் நட்சத்திரங்களும் கலந்து கொண்டு ஆடலும், பாடலும் என களைகட்ட போகிறது.

கோவை இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொலிவுறு நகரத் திட்டத்தில் வேலைவாய்ப்பு!

நிகழ்ச்சி தொடங்கவுள்ள முதல் நாளான இன்று விருதுநகர் மாவட்டத்தில் விஎச்என்எஸ்என் கல்லூரியில் மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடக்கவுள்ளது. இதேபோல நாளைய தினம் மதுரையில் எஸ்ஈவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாலை பொழுது இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பங்குபெறலாம் என விஜய் டிவி கூறியுள்ளது. மேலும் தகவல்கள் வரும் வாரங்களில் வெளிவரும். இதை அனைத்தையும் வைத்து பார்க்கையில் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே விஜய் டிவி நட்சத்திரங்கள் கொண்டு செல்ல போவதாக தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!