விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் ப்ரியங்கா வீட்டில் நடந்த சந்தோஷமான நிகழ்ச்சி பற்றிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அத்தை ஆன சந்தோசத்தை அதில் கேப்சனாக பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளினி பிரியங்கா:

சின்னத்திரையில் பல புதுவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கன்டென்ட் இருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் அந்த வகையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் பிரியங்கா. இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வெகுளியான குணத்தால் ஏகப்பட்ட மக்களை ஈர்த்தார்.

Exams Daily Mobile App Download

அதன் பின் நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடியாமல் இருந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது தவிர எந்த நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனியாக யூடுயூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய குடும்பத்தை பற்றி அடிக்கடி வீடியோ பதிவிடுவார். அவர் தம்பியின் திருமண வீடியோ ஏகப்பட்ட லைக்குகளை பெற்றது.

தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கதிர், வெளியே போக சொன்ன தனம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

அதனை தொடர்ந்து தற்போது அதிகமாக அவர் வீடியோ வெளியிடவில்லை. இந்நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய வீட்டில் நடந்த சந்தோசமாக நிகழ்வு பற்றி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய தம்பி ரோஹித் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் “Iha ❤️ Chiya” என கேப்சன் பதிவிட்டுள்ளார். அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை கமெண்ட் மூலமாக தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!