பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய Love Track.. சக போட்டியாளரிடம் தனது காதலை சொன்ன திருநங்கை ஷிவின்!

0
பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய Love Track.. சக போட்டியாளரிடம் தனது காதலை சொன்ன திருநங்கை ஷிவின்!
பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய Love Track.. சக போட்டியாளரிடம் தனது காதலை சொன்ன திருநங்கை ஷிவின்!
பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய Love Track.. சக போட்டியாளரிடம் தனது காதலை சொன்ன திருநங்கை ஷிவின்!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 6 பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அதில் ஒரு போட்டியாளர் விஜே கதிரவனிடம் தனது காதலை சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

தமிழ் சின்னத்திரையில் புதுமையான கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பல மொழிகளில் வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சியின் தமிழ் வெர்சன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதில் ஜி.பி. முத்து, விக்ரமன், அமுதவாணன், ஷிவின் கணேசன், அஸீம்,அசல் கோலார், மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, குயின்சி, நிவாஷினி, மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலட்சுமி என 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

தற்போது 6 பேர் வெளியேறிய நிலையில் 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டில் வெல்ல போகிறார். இந்நிலையில் இந்த சீசனில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சண்டைகள் நடந்து வருகிறது. கடந்த சீசன்களில் யாரவது ஒருவர் தான் சண்டைக்கு காரணமாக இருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லாமல் யார் யாருடன் சண்டை போடுவார்கள் என்பது பெரிய ட்விஸ்ட்டாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா வீட்டில் நடந்த விசேஷம் – பிரபலங்கள் வாழ்த்து!

Follow our Instagram for more Latest Updates

எவ்வளவு தான் சண்டை இருந்தாலும் ஒவ்வொரு சீசனிலும் சில காதல் ஜோடிகள் இருப்பார்கள். அந்த வகையில் இந்த சீசனில் ஒருவர் காதலை சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஷிவின், விஜே கதிரவனிடம் தனது காதலை சொல்கிறார். திருநங்கையான இவர் ஏற்கனவே ரட்சித்தாவிடம் எனது பெற்றோர்களுக்காக தனது காதலை முறித்துக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அவர் கதிரவன் மீது தனக்கு உள்ள கிரஷ்ஷை அவரிடமே வெளிப்படுத்தியுள்ளார். மணி கணக்கில் இது பற்றி ஷிவின் பேச ஆனால் கதிரவன் புரியாத மாதிரி நடிக்கிறார். ஏற்கனவே கதிரவனுக்கு ஷெரினாவிற்கும் காதல் இருப்பதாக கிசு கிசு வந்தது. தற்போது ஷிவின் கதிரவன் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!