பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி – ப்ரோமோ ரிலீஸ்!

0
பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி 'பிக் பாஸ்' ஜூலி - ப்ரோமோ ரிலீஸ்!
பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி 'பிக் பாஸ்' ஜூலி - ப்ரோமோ ரிலீஸ்!
பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி – ப்ரோமோ ரிலீஸ்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கிய ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1க்கு வந்தபிறகு பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தற்போது புதுவிதமாக நடிப்பில் களமிறங்கியுள்ளார். இதையறிந்த ரசிகர்களும் அவர்களது ஆதரவை தெரிவித்த வண்ணமாக இருக்கிறார்கள்

பிக்பாஸ் ஜூலி:

தமிழ் சினிமா துறையை பொறுத்தமட்டில் புது புது நட்சத்திரங்கள் வந்த மயமாக இருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் குவிய தான் செய்கிறார்கள். அதற்கேற்றார்போல புது புது கதைக்களத்துடன் தொடர்களும் மக்களை என்டேர்டைன் செய்வதற்காக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக சில சீரியல்கள் மட்டுமே அதன் கதைக்களத்தை பொருத்தும், அதில் நடிக்கும் நட்சத்திரங்களை பொருத்தும் ஹிட் கொடுக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பாகி இறுதி நாளாகிய ஞாயிற்றுக்கிழமை அன்று மேலும் மக்களை குஷி ஆக்கும் வகையில் ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகும்.

TN Job “FB  Group” Join Now

இப்படியிருக்கையில் வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு மணி நேரம் ஒரு வீட்டிற்குள் இருக்கும் 100 ஹவுஸ் மேடுகளை 24 மணி நேரமும் கண்காணித்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியை பற்றி சொல்லவா வேண்டும்! அது தான் பிக் பாஸ். இந்த ஷோ கடந்த ஐந்து சீசன்களும் அமோக வெற்றியை அடைந்து முடிவுக்கு வந்தது. இந்த ஷோவின் முதல் சீசனில் பங்குகொண்ட ஒரு போட்டியாளர் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பாப்புலரானதைவிட இந்த ஷோ மூலம் அடைந்த பிரபலம் தான் அதிகம் என்றே சொல்லலாம். அவர் வேறு யாரும் இல்லை ‘அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி’ என்ற டயலாக்குக்கு உரிமையாளரான ஜூலி தான். இவரது அதிக அளவு பிரபலத்துக்கு முக்கிய காரணமே அவரது பெயர் அதிகமாக டேமேஜ் ஆனது தான்.

ஆனாலும் இந்த ஷோவுக்கு பிறகு அவர் திரைப்படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து ஹீரோயினாகவும் நடிப்பதாக சில போஸ்டர்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வெளியாகியது போஸ்டர்கள் மட்டுமே! படங்கள் அல்ல! அதன் பிறகு எங்கே போனார்? என்ன செய்கிறார்? என்ற எந்த தகவலும் இல்லாத நிலையில் திடீரென பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவ்வாறு மீடியாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்த ஜூலி பிக்பாஸ் வீட்டில் எவ்வளவுதான் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இவரது நடிப்புக்கு சான்சே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நகைப்பிரியர்கள் கவனத்திற்கு – இன்றைய தங்க விலை நிலவரம்! நகரங்கள் வாரியாக முழு விபரம் இதோ!

ஏனென்றால் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாய் அவர் பக்கம் திருப்பும் அளவுக்கு இருக்கும். இந்நிலையில் ஜூலி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வில் தெரிய வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் பலரும் அவர்களது ஆதரவை தெரிவித்த மயமாக உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here