Vijay TV Bigg Boss 5 Unseen Promo | ப்ரியங்காவிற்கு பொட்டு வைத்த தாமரை, குழப்பத்தில் ரசிகர்கள்!

0
Vijay TV Bigg Boss 5 Unseen Promo | ப்ரியங்காவிற்கு பொட்டு வைத்த தாமரை, குழப்பத்தில் ரசிகர்கள்!
Vijay TV Bigg Boss 5 Unseen Promo | ப்ரியங்காவிற்கு பொட்டு வைத்த தாமரை, குழப்பத்தில் ரசிகர்கள்!
Vijay TV Bigg Boss 5 Unseen Promo | ப்ரியங்காவிற்கு பொட்டு வைத்த தாமரை, குழப்பத்தில் ரசிகர்கள்!

“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவு நேற்றைய எபிசோடில் சண்டை நடந்த நிலையில், தற்போதும் மீண்டும் பிரியங்கா தாமரை விளையாடும் அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி சுற்றை நெருங்கியதால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் கடந்த சீசன்கள் போல உடல் வலிமையை காட்டும் டாஸ்குகள் இல்லாமல் வாக்குவாதம் செய்யும் டாஸ்குகள் அதிகம் இருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் முதல் டாஸ்க் வாக்குவாதம் செய்யும் டாஸ்க்காக இருந்தது. அதில் அனைவரும் பேசி நிரூப்பை வெளியேற்றினார்கள். போட்டி என்று வந்தால் விளையாடி தான் ஜெயிக்க வேண்டும் என பலர் விமர்சனங்களை தெரிவித்தனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய நடிகை மீனா ஹேமா? ரசிகர்கள் ஷாக்!

அடுத்ததாக உடல் வலிமையை காட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாட வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் அப்படி இல்லாமல் பிரியங்கா அமீர் சேர்ந்து தாமரையை டார்கெட் செய்தனர். அதனால் கோவப்பட்ட தாமரையை மீண்டும் மீண்டும் ப்ரியங்கா சீண்டினார். அதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பிரியங்கா தாமரை என்னை தாக்கி விட்டார் பிக்பாஸ் என கூச்சலிட்டார். நேற்றைய எபிசோட் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தூங்கிய கயல் பாப்பா – கண்ணன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த எபிசோட் பார்த்த கமல் சார் என்ன சொல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். தற்போது அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் தாமரை கார்டன் ஏரியாவில் வைத்துள்ள பிரியங்காவின் படத்திற்கு பொட்டு வைக்கிறார். அதை பார்த்த பிரியங்கா தாமரை வைத்த பொட்டுவை அழித்து விடுகிறார். பின் மீண்டும் தாமரை பொட்டு வைக்க அதை பாத்ரூமில் இருந்து எட்டி பார்த்த பிரியங்கா மீண்டும் வந்து அழிக்கிறார். உடனே தாமரை சிரித்துக் கொண்டே மீண்டும் பொட்டு வைக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!